தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தனியார் நிறுவனத்திற்காக சாலையோர கடைகள் அகற்றம்
By DIN | Published On : 09th July 2021 04:15 PM | Last Updated : 09th July 2021 04:15 PM | அ+அ அ- |

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை.
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தனியார் நிறுவனத்திற்காக சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ரெட்டில்ஸ்-தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழம் பூ கடை என சாலையோரம் 50க்கும் மேற்பட்ட கடைகள் 30 வருடத்திற்கு மேலாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தனியார் தொழிற்சாலை கனரக வாகனங்கள் வந்து செல்ல வழிவகுக்கும் வகையில் திருவள்ளூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உதவி இயக்குனர் இன்ப நாதன் தலைமையில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மேற்பார்வையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலையோர கடைகள் அகற்றப்பட்ட ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறையினருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாமரைப்பாக்கம் ஆட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் தலையிட்டு சாலையோரம் அகற்றப்பட்ட வியாபாரிகளுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் தனியாக கடை அமைத்துத் தருவோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதன்படி சாலையோர வியாபாரிகள் தங்கள் கடைகளை அகற்றி கொண்டனர்.
இந்த நிகழ்வால் இப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சாலையோர வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு கடைகளை அகற்ற அவகாசம் அளிக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.