கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th July 2021 03:09 PM | Last Updated : 28th July 2021 03:09 PM | அ+அ அ- |

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தியும் கும்மிடிப்பூண்டியில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயபிரிவு ஒன்றிய தலைவர் பி.சேகர், அம்மா பேரவை இணை செயலாளர் பிரகாஷ், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் ஐயப்பன், ஊராட்சி தொழில்நுட்ப பிரிவு செயலாளர் உதயன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய அவை தலைவர் அன்வர், கி ளை செயலாளர் ராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நடராஜ், இணை செயலாளர் ரவி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் முருகன், மீனவரணி துணை செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் தேசிங்கு, மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அதிமுகவினர் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன நீட் தேர்வு ரத்து, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், அவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கம் இட்டனர்.
அதே போல கும்மிடிப்பூண்டி பஜாரில் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையிலும் நகர செயலாளர் மு.க.சேகர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ், அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, ராஜேந்திரன், தீபக் செந்தில், சரவணன், எம்.ஏ.மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்று திமுக ஆட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அதே போல ஈகுவார்பாளையத்தில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையிலும், எகுமதுரையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், சுண்ணாம்புகுளத்தில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.ஸ்ரீதர் தலைமையிலும்,எளாவூர் பஜாரில் மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் முல்லைவேந்தன் தலைமையிலும், பூவலம்பேட்டில் முன்னாள் ஊராட்சி தலைவர் லோகாம்பாள் கருணாகரன் முன்னிலையிலும் அதிமுகவினர் திமுக ஆட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.