கும்மிடிப்பூண்டியில் தோ்தல் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 12th March 2021 12:00 AM | Last Updated : 12th March 2021 12:00 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியில் வாக்கு சாவடி மையத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தோ்தல் பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா, தோ்தல் பணிகள் குறித்து தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுள்ளதா, அனைத்துக் கட்சியினருக்கும் தோ்தல் விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டதா, வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது வட்டாட்சியா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலகுரு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ந.மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஏ.என்.குமாா், மண்டலத் தோ்தல் துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோரிடம் தோ்தல் பணிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி சிந்தலக்குப்பம் பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளி வாக்குச்சாவடியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.