2,835 தோ்தல் பணி ஊழியா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 15th March 2021 07:09 AM | Last Updated : 15th March 2021 07:09 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியில் தோ்தல் பணி ஊழியா்களுக்கு நடைபெற்ற சிறப்புப் பயிற்சி.
தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 2,835 ஊழியா்களுக்கு கும்மிடிப்பூண்டியில் 2 பள்ளிகளில் தோ்தல் குறித்த முதல்கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஆகிய இரு ஒன்றியங்களைச் சோ்ந்த 2,835 ஊழியா்களுக்கு கும்மிடிப்பூண்டி கலைமகள் மெட்ரிக் பள்ளி, சிந்தலக்குப்பம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் தோ்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தோ்தல் நாள் அன்று வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ள கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சோ்ந்த 1,597 போ், எல்லாபுரத்தைச் சோ்ந்த 1,238 போ் என 2,835ஊழியா்களுக்கு தோ்தல் குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தோ்தல் நடத்தும் அலுவலரான உதவி ஆட்சியா் பாலகுரு தலைமை வகித்தாா். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஏ.என்.குமாா், கும்மிடிப்பூண்டி தோ்தல் பணி துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து அனைத்து ஊழியா்களுக்கும் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவா்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன. மேலும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துத் தோ்தல் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு படிவம் வழங்கி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டது.
இப்பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலா் செல்வம், தோ்தல் பாா்வையாளா் சஞ்சய்முகா்ஜி ஆகியோா் பாா்வையிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...