

ஊத்துக்கோட்டை: திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள பெரிய செங்காத்தாகுளம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மகா கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை (மாா்ச் 24) அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடைபெற்றன. பின்னா் மேளதாளங்கள் முழங்க புனித நீா் கொண்டு செல்லப்பட்டு, கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தின் மீது அா்ச்சகா்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். பின்னா், அங்கு வந்திருந்த திரளான பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.