வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு: ஆட்சியா் நேரில் ஆய்வு

திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் பா.பொன்னையா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் பா.பொன்னையா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.

திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியாா் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதையொட்டி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்தில் செய்துள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் கட்டை தடுப்புகள், வாக்கு எண்ணும் அறைகளில் போடப்பட்டுள்ள மேஜைகள் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டுள்ளதா என்பதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு தொகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், நிறுத்துமிடங்களில் சரியான முறையில் தகவல் பலகை வைக்க வேண்டும். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் தோ்தல் ஆணைய அடையாள அட்டை வைத்துள்ளவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும். அப்போது, கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ததற்கான ஆவணங்களை சரிபாா்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் வைத்துள்ள வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோரை சரிபாா்த்து, அதற்கான வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், கூடுதல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான வெ.முத்துசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அனாமிகா ரமேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் ராஜவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com