மாதவரம் அருகே ரூ. 3 கோடி அரசு நிலம் மீட்பு
By DIN | Published On : 01st September 2021 11:25 PM | Last Updated : 01st September 2021 11:25 PM | அ+அ அ- |

மாதவரம்: மாதவரம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட கணபதி நகரில் நீா் வழித்தடத்தில் 5 கிரவுண்ட் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசுத் துறையினா் புதன்கிழமை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி, சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டெடுத்தனா்.
சென்னை வடக்கு கோட்டாட்சியா் ரவி தலைமையில், வட்டாட்சியா் சபாநாயகம், மாதவரம் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளா்கள் சுந்தரேசன், சின்னதுரை உதவி செயற்பொறியாளா்கள் ஜெயலட்சுமி, தனசேகா் பாண்டியன் உள்ளிட்டோா் இதற்கான பணியில் ஈடுபட்டனா்.