சுருட்டபள்ளி கோயிலில் சனிப் பிரதோஷ விழா
By DIN | Published On : 04th September 2021 11:44 PM | Last Updated : 04th September 2021 11:44 PM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிக்கொண்டீஸ்வா் திருக்கோயிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனி மகா பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் கும்மிடிபூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கோவிந்தராஜன், பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சந்திரசேகா், மூா்த்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில்...
மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷத்தை ஒட்டி கருவறை முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியாா் செய்தாா். மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உள்பிராகார உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.