திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன் என்கிற அப்பு (17). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உயிர் நண்பன் உதயகுமார்(17). இவர்கள் இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி அன்று உயிரிழந்தாராம்.
அன்றைய நாள் முதல் நண்பன் இறந்த வருத்தத்தில் மில்டன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில நாள்களுக்கு முன்பாக மில்டன் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.
அதையடுத்து பெற்றோர்கள் மில்டனை சமரசம் செய்து வந்தனர். இந்த நிலையில் நாள்தோறும் அதையே நினைத்து விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது நண்பர் இறந்து போன 5-ஆம் தேதி தேதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு கொண்டாராம்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நண்பர் இறந்த துக்கம் தாளாமல், கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு

வேதாரண்யம் - தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக!

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

