தந்தை மீது பொய் வழக்கு: விரக்தியில் மகன் தீக்குளித்துத் தற்கொலை

தந்தை மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டதாகக் கூறி மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்.
தந்தை மீது பொய் வழக்கு: விரக்தியில் மகன் தீக்குளித்துத் தற்கொலை


திருத்தணி: தந்தை மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாகக் கூறி மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

திருத்தணி திருக்குளம் மடம் கிராமத்தில்  இயங்கி வரும் ரேஷனு கடையில் அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பை அதே பகுதி சேர்ந்த முன்னாள் அதிமுக வட்ட செயலாளர் நந்தன் தனது ரேஷன் கார்டு காண்பித்து, 21 பொருட்கள் கொண்ட பை வாங்கினார்.

கடந்த, 7 ம் தேதி நந்தன் ரேஷன் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் எனக்கு வழங்கிய தொகுப்பு பொருட்களில்  புளியில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு விற்பனையாளர் சரவணன் அப்படி இருந்தால் கொடுங்கள் மாற்றி கொடுக்கிறேன் என கூறியுள்ளார். 

ஆனால், நந்தன் ரேஷன் கடையில் வழங்கிய புளியில் பல்லியை காட்டாமல், மொபைல் போன் மூலம் எடுத்த போட்டோவை மட்டும் காட்டியுள்ளார்.
இதை, பத்திரிகை மற்றும் மீடியா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் குறித்து வெளியே கொண்டு வருவேன் என நந்தன் கூறியுள்ளார்.

 மேலும், நந்தன் மீடியா மற்றும் சில ஆளுங்கட்சிக்கு எதிரான செய்தித்தாள்களில் செய்தியை வெளியிட்டுள்ளார்.   இதனைத் தொடர்ந்து கூட்டுறவு விற்பனையாளர் சரவணன் திருத்தணி காவல் நிலையத்தில் புளியில் பல்லி இருப்பதாக கூறினாரே தவிர, நாங்க கொடுத்த கவர் புளியில் பல்லி காட்டவில்லை, வேண்டுமென்றே வதந்தி பரப்பி உள்ளார் என கூறி புகார் கொடுத்தார்.

இதையடுத்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் செவ்வாய்கிழமை நந்தன் மகன் குப்புசாமி, 36 என்பவர் தன்னுடைய தந்தை மீது  பொய் புகார் மற்றும் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் எனக் கூறி வீட்டில் இருந்த பெட்ரோல் கேன்னில் இருந்து உடல்மேல் ஊற்றிக் கொண்டு தீவைத்துக்கொண்டார்.

குப்புசாமி அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த நிகழ்வைக் கண்டித்து திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் எதிரில் அதிமுகவினர் 200 க்கும் மேற்பட்டோர் தற்போது சாலை  ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com