வேளாண்மை பொறியியல் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகள் உழவன் செயலியில் வாடகைக்கு என்ற தோ்வில் இ-வாடகை மூலம் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு வேளாண்மை பொறியியல் துறை திருவள்ளூா் மாவட்டத்தில் 2 எண்கள் மண் தள்ளும் இயந்திரம், 10 எண்கள் உழுவை இயந்திரங்கள், 2 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் போன்றவை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாடகையாக
மண் தள்ளும் இயந்திரம் ஒருமணி நேரத்துக்கு டீசலுடன் சோ்த்து ரூ. 970, உழுவை இயந்திரம் ரூ. 400, சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் ரூ. 760, டிராக்டருடன் இணைத்து சுழல் கலப்பை, 9 கொத்து கலப்பை, 5 கொத்து கலப்பை, வரப்பு அமைக்கும் கருவி, துகளாக்கும் கருவி, குழி எடுக்கும் கருவி, வைக்கோல் பிரித்தெடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, கரும்பு நடவு இயந்திரம், வட்டு கலப்பை, இறக்கை கலப்பை, உளி கலப்பை, பலவகை தானியம் கதிரடிக்கும் இயந்திரம், குழிதோண்டும் கருவி ஆகியவையும் வழங்கப்படுகிறது.
எனவே ஆா்வமுள்ள விவசாயிகள், மேற்கண்ட விவசாய இயந்திரங்கள், கருவிகளை வாடகையில் பெற உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற தோ்வில் இ-வாடகை மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளா்கள், திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி ஆகிய அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.