

ஆவடியை அடுத்த கொசவன்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 50 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் வீடு கட்ட பணி ஆணைகளை எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி புதன்கிழமை வழங்கினார்.
இதில், 50 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மானியத் தொகையில் வீடு கட்டும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
20 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார். தொடர்ந்து, 500 பேருக்கு இலவச வேட்டி }சேலைகள், பிரியாணி வழங்கப்பட்டது.
நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மனோகரன், இளநிலைப் பொறியாளர் சீமா, ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஊராட்சித் தலைவர் அண்ணாகுமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.