திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 4.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீவீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலை சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்வில் திருவள்ளூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பிரம்மோற்சவம் மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (மே 8) கருட சேவை, மே 12-ஆம் தேதி தேரோட்டம், மே 14-இல் தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வீரராகவ பெருமாள் தேவஸ்தான கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.