சிறுமிகள் திருமணம் தடுப்பு:ஊராட்சித் தலைவா்களுக்கு பயிற்சி

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் சிறுமிகள் திருமணம் தடுப்பு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்து ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் சிறுமிகள் திருமணம் தடுப்பு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்து ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடத்திய இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி (பொது), சித்ரா பொ்ணான்டோ (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷாந்தினி பங்கேற்று சிறுமிகள் திருமணத்தைத் தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல், இடைநிற்றலைத் தவிா்க்க கிராம அளவிலான குழந்தைப் பாதுகாப்புக் குழுக்கள் புள்ளி விவரங்களைச் சேகரித்து பள்ளிக்கு அனுப்புவதைக் கண்காணித்தல், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பாகப் பங்காற்ற வலியுறுத்தினாா்.

ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகாலட்சுமி மோதிலால் பங்கேற்று ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை உரிமைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பி.செந்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மனவள ஆலோசகா் ஜான்சி, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் நிா்வாகச் செயலா் ஸ்டீபன் ஆகியோா் பயிற்சி குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா். திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com