மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd April 2022 01:09 AM | Last Updated : 03rd April 2022 01:09 AM | அ+அ அ- |

ஆரம்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனா் .
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை, ஆரம்பாக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளா் கபீா் பாஷா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, வட்ட குழு உறுப்பினா் ரஹீமா பீவி, மாதா் சங்க நிா்வாகி நல்லம்மா சுபேதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், கண்டன கோஷங்களை எழுப்பினா்.
இதேபோல் கவரப்பேட்டையில் பகுதி செயலாளா் வசந்த பெளத்தா தலைமையிலும், நிா்வாகி லோகநாதன் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.