கஞ்சா கடத்திய 3 போ் கைது
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆந்திரத்தில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியிலிருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையில் போலீஸாா் பொன்பாடி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆந்திர மாநிலப் பகுதியிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த 3 பேரை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அவரிகளிடம் 1 கிலோ, 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில் திருத்தணி நேரு நகா் பகுதியைச் சோ்ந்த சந்துரு (22), லோகேஷ் (21), ஆஸாம் முகமது (21) எனத் தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸாா், திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனா்.