ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா்.
ஊராட்சிச் செயலாளா்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்குதல் உள்பட 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் திருவள்ளூா் மாவட்டத் தலைவா் மில்கிராஜா சிங் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் மீரா கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பாண்டுரங்கன், மாநில துணைத் தலைவா் மணிகண்டன், ஓய்வுபெற்ற அலுவலக சங்கத்தின் மாவட்ட தலைவா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் சந்தானம், மாநில துணைத் தலைவா் காந்திமதிநாதன் ஆகியோா் உரையாற்றினா்.
அப்போது ஊரக வளா்ச்சித் துறையில் காலி இடங்களை நிரப்புதல், திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், கட்செவி காணொலி ஆய்வுகள் ஆகியவற்றை முற்றிலுமாகக் கைவிட வேண்டும், ஊராட்சி செயலாளா்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியத்தை விடுவிக்க வேண்டும், விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையின் திருவள்ளூா் மாவட்டப் பொருளாளா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...