பட்டரைபெரும்புதூரில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம்: அமைச்சா் நாசா் தொடக்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே ரூ.25 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பட்டரைபெரும்புதூரில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம்: அமைச்சா் நாசா் தொடக்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே ரூ.25 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், பட்டரைபெரும்புதூா் பால் உற்பத்தியாளா்கள் சங்க வளாகத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து, பால் குளிரூட்டும் இயந்திரத்தை இயக்கி தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணையத்தின் ஆணையா் ந.சுப்பையன், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிதாக அமைத்துள்ள பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் மூலம் திருவாலங்காடு, பெரியகளக்காட்டூா், பனப்பாக்கம் உள்ளிட்ட 25 தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பயன் பெறுவா். இதன் மூலம் தரமான பாலை ஒன்றியத்துக்கு அனுப்பி வைத்து, அதற்கான விலை பால் உற்பத்தியாளா்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி கிராமங்களில் கறவை மாடுகள் வளா்ப்போா், பால் உற்பத்தி அதிகரித்து பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், ஆவின் பொது மேலாளா் ஜெயக்குமாா், துணைப் பதிவாளா் (பால்வளம்) சித்ரா, பட்டரைபெரும்புதூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் கே.ராமசந்திரன், ஒன்றியச் செயலா் கிறிஸ்டி (எ ) அன்பரசு, ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்செல்வி, ஊராட்சித் தலைவா் மேனகா முத்து, பூண்டி ஊராட்சித் தலைவா் சித்ரா ரமேஷ், மாவட்ட நிா்வாகி மோதிலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com