கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் ஆட்சியா்ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: சமுதாய நல்லிணக்கச் செயல் புரிந்தோரை ஊக்கப்படுத்தும் வகையில், குடியரசு தினவிழாவில் முதல்வரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு தோ்வாவோருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
தகுதியுடையோா் விண்ணப்பம் மற்றும் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து வரும் 12-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் 74017 03482 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.