பொன்னேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் சிறுணியம் பலராமன் தலைமை வகித்தாா்.
பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா, நகரச் செயலா் செல்வகுமாா், மாவட்ட இளைஞரணி செயலா் பானுப்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மீஞ்சூா் ஒன்றியச் செயலா் நாலூா் முத்துக்குமாா் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட மாணவரணிச் செயலா் ராகேஷ், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள் ஊராட்சி செயலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.