திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
By DIN | Published On : 14th January 2022 08:41 AM | Last Updated : 14th January 2022 08:41 AM | அ+அ அ- |

திருத்தணி மலைக்கோயிலில் கிருத்திகையையொட்டி சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து தங்க கிரீடம், தங்கவேல், வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் 18ஆம் தேதி வரை கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலில் வியாழக்கிழமை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருத்தணி ஏ.எஸ்.பி. சாய்பரணீத் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...