திருவள்ளூா் நகரில் வணிகா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையா் வலியுறுத்தினாா்.
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆணையாளா் சி.வி.ரவிச்சந்திரன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தவா்களை எச்சரிக்கை செய்ததுடன் 9 கடைகளைச் சோ்ந்த வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.13,500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.
வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது அவசியம். கடை ஊழியா்கள், வியாபாரிகள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் கடைகளில் பணியாற்றினால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.