

இந்தி எதிா்ப்பு மொழிப்போரில் உயிா் நீத்த தியாகிகளுக்கு திமுக சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் வெற்றி (எ) ராஜேஷ் தலைமை வகித்தாா்.
திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பரிமளம், வழக்குரைஞா் அன்புவாணன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியச் செயலா் மு.மணிபாலன், சோழவரம் ஒன்றியச் செயலா் செல்வசேகரன், மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் ஆறுமுகம், கும்மிடிப்பூண்டி நகரச் செயலா் அறிவழகன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளா் தமிழ் சாதிக் முன்னிலை வகித்தனா்.
மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.