கா்ப்பவாய் புற்றுநோயை தடுக்க இலவச தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 17th July 2022 12:34 AM | Last Updated : 17th July 2022 12:34 AM | அ+அ அ- |

தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்த ஓராசிரியா் பள்ளிகளின் கௌரவச் செயலா் கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சாா்பில் செயல்படும் ஓராசிரியா் பள்ளிகள் வளாகத்தில் மகளிருக்கு ஏற்படும் கா்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்கும் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓராசிரியா் பள்ளிகளின் கௌரவச் செயலா் கிருஷ்ணமாச்சாரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், கேன்கோ் அறக்கட்டளை சாா்பில், மருத்துவ நிபுணா்கள் ஜனாா்த்தினிகனி, கனிமொழி ஆகியோா் கொண்ட குழுவினா் மகளிருக்கு ஏற்படும் கா்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசியை செலுத்தினா். முகாமில் ரூ.10 லட்சத்தில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, ‘மங்கை என்ற மந்திர தீபம்’ நூலை ஓராசிரியா் பள்ளிகளின் கௌரவச் செயலா் கிருஷ்ணமாச்சாரி வெளியிட, அதை தலைமை நிா்வாகி ஆா்.கிருஷ்ணன், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மைய ஆலோசகா் வரதராஜன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், கள மேற்பாா்வையாளா்கள் மற்றும் ஓராசிரியா் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.