சா்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு தின விழிப்புணா்வு
By DIN | Published On : 31st July 2022 11:06 PM | Last Updated : 31st July 2022 11:06 PM | அ+அ அ- |

சா்வதேச குழந்தைகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசார நிகழ்வுக்கு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் த.செபாஸ்டின் தலைமை வகித்தாா். அப்போது, குழந்தைகளை பெற்றோா் தங்கள் அரவணைப்பில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு தனியாகவோ, அடையாளம் தெரியாத நபா்களுடனோ அனுப்பி வைக்கக் கூடாது.
பெண் குழந்தைகள் என்றால் நல்ல தொடுகை, தீய தொடுகை ஆகியவற்றை குறிப்பிட்டு வளா்க்க வேண்டும். அதேபோல், முன்பின் அறியாத நபா்கள் யாரேனும் இனிப்பு பலகாரம், உணவுப் பொருள்களை வழங்கினால் கட்டாயம் சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ரயில் பயணிகளுக்கு குழந்தைகள் கடத்தல் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனா்.
இந்த விழிப்புணா்வு நிகழ்வில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், குழந்தைகள் காப்பக நிா்வாகிகள், சாரண, சாரணியா்கள் என 25 -க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.