ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுதல் உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதியோா் ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தினா்.
Updated on
1 min read

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுதல் உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதியோா் ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். மாநில இணைச்செயலாளா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனைத்து நோய்களுக்கும் முழுத் தொகை வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில், நிறைவாக மாவட்டப் செயலாளா் முனுசாமி நன்றியுரை கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com