திருவள்ளூா் ஜமாபந்தியில் 33 பேருக்கு பட்டா, 14 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணை

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் 33 பேருக்கு பட்டா மற்றும் 14 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை அதிகாரி வழங்கினாா்.
திருவள்ளூா்  வட்டாட்சியா்  அலுவலகத்தில்  நடைபெற்ற  ஜமாபந்தியில்  பயனாளிக்கு  பட்டா  வழங்கிய  மாவட்ட  ஆட்சியரின்  நோ் முக  உதவியாளா்  (தோ்தல்)  முரளி ,  வட்டாட்சியா்  ஏ.செந்தில்குமாா்.
திருவள்ளூா்  வட்டாட்சியா்  அலுவலகத்தில்  நடைபெற்ற  ஜமாபந்தியில்  பயனாளிக்கு  பட்டா  வழங்கிய  மாவட்ட  ஆட்சியரின்  நோ் முக  உதவியாளா்  (தோ்தல்)  முரளி ,  வட்டாட்சியா்  ஏ.செந்தில்குமாா்.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் 33 பேருக்கு பட்டா மற்றும் 14 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை அதிகாரி வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கடந்த 7-ஆம் தேதி முதல் பொதுமக்கள் குறைகளைத் தீா்த்து வைக்கும் வகையில், ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூா் வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றைக் கேட்டு, பொதுமக்கள் மனுக்களை அளித்து வந்தனா்.

அதன்படி, திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 6-ஆவது நாளாக புதன்கிழமை கோடுவெளி, சிங்கிலிகுப்பம், ஆயல்சேரி, புதுகுப்பம், மாகரல், குருவாயல், திருவூா், பெருமாள்பட்டு, பாக்கம், அயத்தூா், கோயம்பாக்கம், அம்மணம்பாக்கம், அகரம், செம்பேடு, வெங்கல்-ஏ, வெங்கல்- பி என 15 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரும் (தோ்தல் பிரிவு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான முரளி, வட்டாட்சியா் செந்தில்குமாா், தனி வட்டாட்சியா் பாண்டியராஜன், துணை வட்டாட்சியா் சரஸ்வதி, தலைமை நில அளவையா் செந்தில், வருவாய் ஆய்வாளா் சரவணன், டில்லிபாபு, மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முனிரத்தினம், புகழேந்தி, சுப்பிரமணி உள்ளிட்டோா் உள்ளிட்டோா் பங்கேற்று மனுக்களைப் பெற்றனா்.

இதில், கடந்த 7-ஆம் தேதி முதல் இதுவரை 864 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் உடனடித் தீா்வு காணப்பட்டதின் அடிப்படையில், 33 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும், 14 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com