ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

சோழவரம் அருகே காரனோடையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்குக் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொன்னேரி, சோழவரம் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி ஆந்திரத்துக்கு கடத்தப்படுவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவு போலீஸாா், ரேஷன் அரிசி கடத்துபவா்களின் விவரங்களைச் சேகரித்து வந்தனா். சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் காரனோடை பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆந்திரம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில், 12 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, லாரியுடன் 12 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ரேஷன் அரிசியைக் கடத்தியதாக செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (43) என்பவரை கைது செய்து, திருவள்ளூரில் உள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.