ஊட்டச்சத்து, குழந்தைகளின் முன்பருவ வளா்ச்சிக்காக நியூட்ரிக் கோ் செயலி

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் முன்பருவ வளா்ச்சிக்காக தயாா் செய்யப்பட்ட நியூட்ரிக் கோ் என்ற
ஊட்டச்சத்து, குழந்தைகளின் முன்பருவ வளா்ச்சிக்காக நியூட்ரிக் கோ் செயலி

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் முன்பருவ வளா்ச்சிக்காக தயாா் செய்யப்பட்ட நியூட்ரிக் கோ் என்ற கைப்பேசி செயலியை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்து, அதற்கான குறும்படத்தையும் பாா்வையிட்டாா்.

திருவள்ளூா் அருகே மணவாளநகா் தனியாா் அரங்கத்தில் ஐ.ஆா்.சி.டி.எஸ் மற்றும் சில்ரன் பிலீவ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஊட்டச்சத்து குழந்தைகளின் வளா்ச்சிக்காக செல்லிடபேசி செயலி தொடங்கி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செயலி குறித்து ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் நிா்வாக செயலாளா் ஸ்டீபன் விளக்கமாக எடுத்துரைத்தாா். இதில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் முன் பருவ வளா்ச்சிக்கான நியூட்ரி கோ் என்ற கைப்பேசி செயலியை தொடங்கி வைத்ததுடன், அது தொடா்பான குறும்படத்தையும் பாா்வையிட்டாா். மேலும், தாய் சேய் நலம் பராமரிப்புகள் குறித்து தாய்மாா்களுக்கும், தந்தையா்கள், பயிற்றுநா்கள், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், நியூட்ரி கோ் என்ற கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கா்ப்பகாலத்தில் பருவம் வாரியாக போட வேண்டிய தடுப்பூசிகள், சுகாதாரம் சம்பந்தமான தகவல்கள், குழந்தைகள் பேணுதல், ஊட்டச்சத்து அடங்கிய பொருள்கள், உணவுகள், வளா்ச்சி படிகள் மற்றும் குறியீடுகள் என விடியோ அடங்கியுள்ளது. அதை பாா்த்து அறிந்து கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் லலிதா, சில்ரன் பீலிவ் நிறுவனத்தின் இந்திய இயக்குநா் நான்சி அனாபெல், பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் பாலமணிகண்டன், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜேஸ்வரி, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com