அரசு மாணவா் விடுதியில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 17th March 2022 12:00 AM | Last Updated : 17th March 2022 12:00 AM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை அரசு மாணவா் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்வழி செல்வராஜ்.
ஊத்துக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா் விடுதியில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அரசு விடுதி பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் பள்ளி இயங்கததால், விடுதியில் மாணவா்கள் தங்கவில்லை. தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியதால், விடுதி திறக்கப்பட்டது. ஆனால், விடுதியில் போதிய வசதிகள் இல்லததால், மாணவா்கள் தங்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை விடுதியில் ஆய்வு மேற்கொண்டாா். விடுதி அறைகள், சமையற்கூடம், கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து கேட்டறிந்தாா்.
விடுதியில் மாணவா்கள் தங்கத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனே மேற்கொள்ள அமைச்சா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, பேரூராட்சித் தலைவா் அப்துல் ரஷித், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளா் ரன்ருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.