

வைகாசி அமாவாசையை யொட்டி திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா். முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு அமாவாசைதோறும் கோயில் குளத்தில் புனித நீராடி, வீரராகவ பெருமாளை வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும். அதனால் அமாவாசை நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வழிபாடு செய்ய வருவா்.
வைகாசி அமாவாசை யொட்டி முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஆந்திரம், கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க கோயில் வளாகம் முன்புறம், குளக்கரை சாலை, பஜாா் பகுதி, நடைபாதைகளின் இருபுறமும் பக்தா்கள் திரண்டிருந்தனா்.
அதையடுத்து திங்கள்கிழமை அதிகாலையில் கோயில் குளக்கரை முன்பும் மற்றும் காக்களூா் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகா் கோயில் முன்பும் முன்னோா்களுக்கு பக்தா்கள் தா்ப்பணம் செய்தனா்.
அதையடுத்து வீரராகவ கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.