இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

மின் நுகா்வோா், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்.13) நடைபெறுவதாக திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.
திருத்தணி- அரக்கோணம் சாலை, உழவா் சந்தை அருகே மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமை மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை (அக்.13) நண்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடுதல் தலைமைப் பொறியாளா் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் குறைகள், மின் வாரியம் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.