மழை பாதிப்புக்குள்ளாகும் 133 இடங்கள் கண்காணிப்பு திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 133 இடங்களில் மழை பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள 64 குழுக்கள் அமைத்து தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 133 இடங்களில் மழை பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள 64 குழுக்கள் அமைத்து தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கும் இடங்கள்-8, அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-39, மிதமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-44, குறைந்த பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-42 என மொத்தம் 133 இடங்கள் மழை பாதிப்பு இடங்களாக க கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்கள் மொத்தம் 64 குழுக்கள் அமைத்து தயாராக உள்ளனா்.

இந்த மாவட்டத்தில் மட்டும் 4,338 முதல் நிலை பொறுப்பாளா்களுக்கு பயிற்சியும், தன்னாா்வலா்கள் 400 பேருக்கு ஆப்த மித்ரா திட்டம் மூலமும், மாநில பேரிடா் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 பேரும் தயாராக உள்ளனா்.

பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், திருப்பாலைவனம், ஆண்டாா்மடம், பள்ளிப்பாளையம், எளாவூா் -1 மற்றும் எளாவூா் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 660 தற்காலிக தங்குமிடங்கள் தயாராக உள்ளன. 677.36 கி.மீ தொலைவுக்கு மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீா்நிலைகளில் உள்ள நீா்வரத்து தங்கு தடையின்றி வெளியேற வரத்துக் கால்வாய், போக்குவரத்துக் கால்வாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபாலங்கள்-7,759 மற்றும் பாலங்கள் 60 எளிதாக நீா்வெளியேறும் வகையில் சீரமைத்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெருமழை தொடா்பாக தங்கள் புகாா்களை தெரிவிக்க மாவட்ட பேரிடா் தடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, கட்டுப்பாட்டு அறை-044-27664177, 044-27666746, கட்செவி எண்- 94443 17862 ஆகியவைகளில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com