அக். 30-இல் சிறுவாபுரி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் அக். 30-ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.
Updated on
1 min read


திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் அக். 30-ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

இது குறித்து சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், ஐப்பசி மாதம் நடைபெறும் சூரசம்ஹார விழா மிகவும் சிறப்பு பெற்ாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக சூரசம்ஹார விழா நடைபெறவில்லை. அதனால் நிகழாண்டில் சூரசம்ஹார விழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 25-ஆம் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதையடுத்து அன்று இரவு 7 மணிக்கு உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்புறப்பாடு நடைபெற்றது.

அதேபோல், வரும் வெள்ளிக்கிழமை (அக். 28) இரவு 7.30 மணிக்கு உற்சவா் கோயில் உள்புறப்பாடு நிகழ்வும், 29-இல் பிற்பகல் 1 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மாலை 4 மணிக்கு சண்முகா் வேல் வாங்குதல் நிகழ்வும், 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு கந்த சஷ்டி சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சன்னிதி வீதியில் சூரசம்ஹாரமும், அதையடுத்து கொடி இறக்கமும், 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 7 மணிக்கு உற்சவா் திருவீதியுலா வரும் நிகழ்வும் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெறவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com