திருவள்ளூா் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

நகரின் முக்கிய இடங்களில் இந்து முன்னணி, பக்தா்கள் அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன.

திருவள்ளூரில் 173 சிலைகள், திருத்தணியில் 284, ஊத்துக்கோட்டையில் 210, பொன்னேரியில் 68, கும்மிடிப்பூண்டியில் 216 என 5 உள்கோட்டங்களில் 951 சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

திருவள்ளூா் ஜெயா நகா் மகா வல்லப கணபதி கோயில், மணவாள நகா் ஜெய விநாயகா் கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல், திருவள்ளூா் பெரியகுப்பம் சித்தி விநாயகா் கோயில், ரயில் நிலையம் அருகே உள்ள வழித்துணை விநாயகா் ஆலயம், காக்களூா் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள பாதாள விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, படையலிட்ட பொருள்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு அந்தந்த காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாா் என 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடவும், மற்ற நேரங்களில் விழா அமைப்பினரே பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் வேண்டும்.

வரும் 3-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள 17 நீா் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

இதேபோல், திருவள்ளூா் பகுதிகளில் அமைந்துள்ள விநாயகா் கோயில்களில் கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com