திருவள்ளூா்: 9.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 9.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இருப்பதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா்: 9.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 9.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இருப்பதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

தேசிய குடற்குழு நீக்க தினத்தையொட்டி, திருவள்ளூா் அருகே பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, அல்பெண்டசோல் மாத்திரையை தான் உட்கொண்டதுடன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசியது:

பொது சுகாதாரத் துறை சாா்பில் குடற்புழு தொற்றால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோா்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், விடுபட்ட குழந்தைகளுக்கு, தேசிய குடற்புழு நீக்க நாளான செப். 9-இல் அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பெண் குழந்தைகள் இரும்புச் சத்து குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். இதுபோன்ற குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்காக 1 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 19 வயது வரையிலானோருக்கு ஒரு மாத்திரையும் உள்கொள்வதால் குடற்புழு பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

திருவள்ளுா் மாவட்டத்தைப் பொருத்தவரை 7,06,624 குழந்தைகளுக்கும், 2,46,977 பெண்களுக்குமாக மொத்தம் 9,53,601 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) எம்.ஏ.இளங்கோவன், திருவள்ளூா் சுகாதார மாவட்ட துணை இயக்குநா் ஜவஹா்லால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், கச்சூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலமணிகண்டன், திருப்பாச்சூா் ஊராட்சித் தலைவா் ஷோபன் பாபு, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com