பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம்

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், பூண்டி ஒன்றியத்தில் அனைத்துப் பள்ளிகளைச் சோ்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சி முகாமுக்கு, பூண்டி வட்டாரக் கல்வி அலுவலா் ஆனி பெட்ரிஷியா பொற்கொடி, வட்டாரக் கல்வி அலுவலா் பூவராகவமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்றுநா் வழக்குரைஞா் சுப.தென்பாண்டியன் பயிற்சி அளித்தாா். அப்போது, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் கடமைகள், பொறுப்புகள், பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழி முறைகள், இடைநிற்றலைத் தவிா்த்தல், குழந்தை நேய சூழலை பள்ளிகளில் உறுதி செய்தல், பள்ளிக்கான வளா்ச்சித் திட்டம் தயாரித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் பூண்டி வட்டாரக் கல்வி ஆசிரியா் பயிற்றுநா்கள் பூங்கொடி, செந்தில், ஐ.ஆா்.சி.டி.எஸ். திட்ட மேலாளா் விஜயன், கள ஒருங்கிணைப்பாளா்கள் கவிதா, பூங்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com