அம்பத்தூர் தொகுதியில் உள்ள 5 பள்ளிகளைச் சேர்ந்த 1,224 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 5 பள்ளிகளில் 2022- 23-ஆம் கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு, அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர் எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொரட்டூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அத்திப்பட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 1,224 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்க்ஸ், வடக்கு மாவட்டக் கல்வி அலுவலர் இ.முருகன், திமுக பகுதிச் செயலர்கள் எம்.டி.ஆர். நாகராஜ், டி.எஸ்.பி. ராஜகோபால், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வனிதா ராணி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.