திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பெண் பூ வியாபாரிக்கு கத்திக் குத்து

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பெண் பூ வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பெண் பூ வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பொம்மைநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பூ வியாபாரி அமுதா (43). தற்போது, திருவள்ளூரில் வசித்து வரும் இவா், ரயில் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அமுதா பூ வியாபாரம் முடித்து வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, திருவள்ளூா் ரயில் நிலையத்தில் உறவுக்காரரான சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த நபருடன் நடைமேடை 4-இல் நின்று பேசிக் கொண்டிருந்தாராம். அங்கு, மது போதையில் வந்த இளைஞா் திடீரென அமுதாவிடம் ரகளையில் ஈடுபட்டாராம். இதையடுத்து, அந்த இளைஞரை தான் பூ அறுக்க வைத்திருந்த கத்தியைக் காட்டி எச்சரித்ததாராம்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞா் திடீரென அந்தக் கத்தியைப் பறித்து அமுதாவின் கழுத்தை அறுத்தாா். மேலும், அவரது கை, இடுப்பில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

பலத்த காயமடைந்த அமுதாவை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.

ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் பெண்ணைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com