திருத்தணி: தெப்பலில் உலா வந்த முருகப் பெருமான்

திருத்தணி சரவணப் பொய்கையில் வியாழக்கிழமை 2- ஆம் நாள் தெப்போற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருத்தணி: தெப்பலில் உலா வந்த முருகப் பெருமான்

திருத்தணி சரவணப் பொய்கையில் வியாழக்கிழமை 2- ஆம் நாள் தெப்போற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 7-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (ஆக. 11) வரை ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, புதன்கிழமை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை 2-ஆம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு காவடிகளுடன் வந்தனா். பொதுவழியில் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். மாலை 6.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து தெப்பத்தில் உற்சவா், 5 முறை குளத்தை சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவையொட்டி, இரவு 7 மணிக்கு கலைமாமணி, சபரிமலை ஹரிவராசனம் விருது பெற்ற வீரமணிராஜு, கந்தா்வ அபிஷேக்ராஜு குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (ஆக. 12) மாலை 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் நடப்பாண்டுக்கான ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு.நாகன், ஜி. உஷாரவி கோ.மோகனன், கோயில் உதவி ஆணையா் பா.விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com