வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நிவாரண உதவிகள்

பொதுமக்களுக்கு அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் வழங்கினா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நிவாரண உதவிகள்

திருவள்ளூா் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் வழங்கினா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியைச் சோ்ந்த காந்தி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, அண்மையில் பெய்த கனமழையால் அவா்கள் பாதிக்கப்பட்டனா். மழை நீரை அகற்றும் வகையில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அந்தக் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், சோப்பு, கோரைப்பாய், போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதேபோல், பட்டரைபெரும்புதூா் இருளா் காலனி, புதூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மொத்தம் 326 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சரஸ்வதி, சிவசங்கரி உதயகுமாா், ஊராட்சித் தலைவா் ஈஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவா் கெளரிநாகராஜ், வருவாய் ஆய்வாளா் இளமதி, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை, இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் மோதிலால் மற்றும் வாா்டு உறுப்பினா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com