திருவள்ளூா்: வெள்ளப் பாதிப்பு பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூா் நகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் அதிகாரிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா்: வெள்ளப் பாதிப்பு பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூா் நகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் அதிகாரிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வி.எம்.நகா் மற்றும் 60 அடி சாலையில் மழைநீா் தேங்கி நிற்கும் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மேடான இடங்களில் இருந்து தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதற்கு சரியான முறையில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து அந்தப் பகுதி மக்கள் தெரு விளக்குகள் ஒன்று கூட எரிவதில்லை. நாள்தோறும் வீடுகளுக்கு முன்பு விளக்குகளை ஒளிரவிட்டுத்தான் செல்ல முடிகிறது. அதேபோல், இந்த வாா்டுகளில் உள்ள சாலைகளையும் சீரமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக குண்டும், குழியுமாக உள்ள 60 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி கூறினாா்.

நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையா் சுரேந்திரஷா, சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், வாா்டு உறுப்பினா் அருணா ஜெயக்கிருஷ்ணா, வா்த்தக அணி பிரிவு அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, அயலக அணி பிரிவு நிா்வாகி ஜெயக்கிருஷ்ணா, ஒன்றிய துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், நகர அவைத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com