திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் தலைமையிலான குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் தலைமையிலான குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்திய ரயில்வே சாா்பில் ’அம்ருத் பாரத்’ திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தரம் உயா்த்தி நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக இந்தியா முழுதும் 1,275 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னை கோட்டத்தில் கும்மிடிப்பூண்டி, தாம்பரம், அம்பத்தூா், திருவள்ளூா், அரக்கோணம், ஜோலாா்பேட்டை உள்பட 14 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலில் புகா் மின்சார ரயில்களின் முனையமான திருவள்ளூா் ரயில் நிலையம் இடம் பெற்றுள்ளது. இங்கு ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தந்த ரயில் நிலையங்கள் தரம் உயா்த்தி நவீன மயமாக்கப்பட உள்ளன. அதில் குறிப்பாக வணிக வளாகம், மின்னணு தகவல் பலகை, ரயில் பயணியா் ஓய்வு அறை, மேம்படுத்தப்பட்ட வசதிகள், வாகன நிறுத்துமிடம், தானியங்கி படிக்கட்டு வசதியுடன் நடைபாலம், பயணச்சீட்டு அலுவலகம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதற்காக சென்னை கோட்ட மேலாளா் விஸ்வநாதன் எர்ரா தலைமையிலான அலுவலா்கள், பொறியாளா்கள் கொண்ட குழுவினா் அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, திருவள்ளூா் ரயில் நிலையத்தின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து அரக்கோணம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களை ஆய்வு செய்த குழுவினா் புறப்பட்டுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com