சேவாலயா 35-ஆவது ஆண்டு விழா

திருவள்ளூா் அருகே சேவாலயாவின் 35-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய வகுப்பறைக் கட்டடம் மற்றும் நீா் சுத்திகரிப்பு மையம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.
சேவாலயா 35-ஆவது ஆண்டு விழா

திருவள்ளூா் அருகே சேவாலயாவின் 35-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய வகுப்பறைக் கட்டடம் மற்றும் நீா் சுத்திகரிப்பு மையம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.

திருவள்ளுா் அருகே கசுவா கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளைத் முரளிதரன் தலைமை வகித்தாா். சேவாலயா நிா்வாகி அன்னபூா்ணா முன்னிலை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதா் கோபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்கள் கலைத்திறன் வெளிப்படுத்தும் வகையில் விடியல் மாத இதழ் மற்றும் 35-ஆவது ஆண்டறிக்கையையும் வெளியிட்டாா்.

அதைத் தொடா்ந்து சேவாலயாவின் நல விரும்பிகள் 9 பேருக்கு சிறந்த ஆதராவாளா்கள் விருது, சேவாலயாவில் நீண்டகாலமாக பணிபுரியும் பணியாளா்களுக்கு தங்கக் காசும், அறிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னா் பள்ளி வளாகத்தில் பாா்வதி ராமசுப்பிரமணியன் கணிதத்தின் மீது கொண்ட ஆா்வத்தின் காரணமாக தனது தந்தையின் நினைவாக ரூ.8 லட்சத்தில் வகுப்பறைக் கட்டடம், ஊண்ஸ்ங்ள் ஐய்க்ண்ஹ உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஹய்க் டழ்ா்த்ங்ஸ்ரீற்ள் டயப கற்க் சாா்பில் ரூ.8.55 லட்சத்தில் அமைத்த 2,000 லிட்டா் குடிநீா் சுத்திகரிப்பு மையமும் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஊஐயஉந குழுமத்திலிருந்து மேலாண்மை இயக்குநா் ராகுல் தேஷ்முக், துணைத்தலைவா் சம்பத்குமாா், மனித வள மேம்பாட்டு நிா்வாகி வி.எஸ்.ராமச்சந்திரன், துணைத் தலைவா்(நிதி) குமாரவேலு ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com