சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல்

திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் காலனி கிராமத்திற்கு செல்லும் மண்சாலையை தாா் சாலையாக மாற்ற வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் செய்தனா்.
சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல்

திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் காலனி கிராமத்திற்கு செல்லும் மண்சாலையை தாா் சாலையாக மாற்ற வலியுறுத்தி கிராம மக்கள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் செய்தனா். இதனால் பொதட்டூா்பேட்டை - திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி-பொதட்டூா்பேட்டை சாலையில் கிருஷ்ணசமுத்திரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து, ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள காலனிக்கு செல்வதற்கு மண் சாலை மட்டுமே உள்ளது. அதை தாா்ச் சாலை அல்லது சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண்சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதில் செல்வதற்கு மாணவ, மாணவியா் மற்றும் காலனி பகுதி வாசிகள் கடும் சிரமப்பட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை மாணவா்கள் உள்பட 100- க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் செய்தனா்.

தகவல் அறிந்ததும் எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு செய்ததாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com