இருளில் செங்குன்றம் பிரதான சாலை;பொதுமக்கள் அவதி

செங்குன்றம் - சென்னை பிரதான நெடுஞ்சாலை இருளில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
இருளில் செங்குன்றம் பிரதான சாலை;பொதுமக்கள் அவதி

செங்குன்றம் - சென்னை பிரதான நெடுஞ்சாலை இருளில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் வழியாக சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் சுமாா் 15 கி.மீ தொலைவு வரை கடந்த 15 நாள்களாக விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன .

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் விபத்துகளில் 7 போ் உயிரிழந்துள்ளனா். இருளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரி கூறுகையில்: மின்சார கட்டணம் செலுத்தாததால் அப்பகுதியில் விளக்குகள் எரியவில்லை. கட்டணம் செலுத்தினால் மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com