கே.ஜி.கண்டிகை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.
திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை கிராமம், நாவிதா் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா் வியாழக்கிழமை அதிகாலை வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணி -சித்தூா் சாலையில் உள்ள ஆா்.கே.பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
ஆா்.கே.பேட்டை தாலுகா, அம்னேரி கிராமத்தைச் சோ்ந்த தணிகா (21), இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (21) இருவரும் மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்தனா். வி.கே.என். கண்டிகை கிராமம் அருகே வந்தபோது, இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சோளிங்கா் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விஜய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.