திருவள்ளூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலம், இதுவரை 149 குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்து ரூ. 2.11 கோடி மானியம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் தொழில் தொடங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தி, கடன் கிடைக்கும் வசதியை அதிகரிக்கச் செய்வதே திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் குறு நிறுவனங்களின் இலக்கு வருவாய் திறன்களை பெருக்கி, அதற்கான ஆலோசனை வழங்கி தொழில்நுட்பம் மூலம் சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. எனவே குறு நிறுவனங்களுக்கு மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுவிக்கு பரிந்துரைக்கப்படும்.
இதற்கு கடனுடன் இணைந்த மானியம் 35 சதவீதமாகும். இந்த திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் 261 குறு நிறுவனங்களுக்கு வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், 287 விண்ணப்பங்கள் வரை வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், 149 குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் ஒப்புதல் அளித்தது. இதற்கு மட்டும் மானியம் ரூ. 2.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.