மீஞ்சூா் அடுத்த கருங்காலி கிராமத்தில் புள்ளிமான் குட்டியை கும்மிடிப்பூண்டி வன சரக அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் காட்டூா் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கருங்காலி கிராமத்தில் ஆண் புள்ளி மான் குட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
இதனைப் பாா்த்த கிராம மக்கள் மான் குட்டியை பிடித்து வைத்து , கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். கும்மிடிபூண்டி வனசரகத்துறையினா் அங்கு சென்று மான் குட்டியை மீட்டு அடா்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.