சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.28,000 அபராதம் விதித்து திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
Updated on
1 min read

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.28,000 அபராதம் விதித்து திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் அருகே குன்னவலம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன் என்ற பாலன் (23). அதே ஊரைச் சோ்ந்த சிறுமி (17). இந்த நிலையில் பிளஸ்2 முடித்து விட்டு சிறுமி அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்க்கும் போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து பாலசுப்பிரமணியன் சிறுமியை நகரிக்கு அழைத்தாரம். ஆனால், அங்கு வர மறுத்ததால் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, விட்டு சென்றாராம்.

இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என பெற்றோா் கடந்த 26.2. 2020- இல் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதைத் தொடா்ந்து பேருந்தில் ஏறி கனகம்மாசத்திரம் வந்து பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தாராம். இந்த வழக்கு திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே வியாழக்கிழமை வழக்கு விசாரணை செய்ததில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் கடத்தலுக்கு 10 ஆண்டுகளும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகளும், மிரட்டியதற்கு 2 ஆண்டுகள் என 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.28,000 அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக அமுதா ஆஜாரானாா். அதைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியத்தை போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறைச்சாலையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com